என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூறை காற்றுடன் மழை"
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. தற்போது அக்னி நட்சத்திரம் நடந்து வருவதால் பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல இடங்களில் மாலை நேரத்தில் சூறாவளி காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. நேற்றும் அதே போல் சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் மழை பெய்தது. நெல்லை, பாளை, செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, கடையம், களக்காடு உள்ளிட்ட பல பகுதியில் மழை கொட்டியது. பாபநாசம் கீழ்அணை பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது.
சூறாவளி காற்று காரணமாக பாளை சாந்திநகர் பகுதியில் ஏராளமான மரம் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாந்திநகர், சீனிவாசநகர், வி.எம்.சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இரவு வரை மின்தடை ஏற்பட்டது.
களக்காடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கத்திரி வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று மாலையில் திடீர் என இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டியது. மழையின் போது சூறை காற்றும் வீசியது. இந்த சூறை காற்றினால் களக்காடு அருகே சிதம்பரபுரம் பழங்குளத்து பகுதியில் பயிர் செய்யப்பட்டிருந்த 2 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதமானது.
இந்த வாழைகள் சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயி சங்கருக்கு சொந்தமானது ஆகும். குலை தள்ளிய நிலையில் வாழைகள் நாசமானதால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் வீசிய சூறை காற்றினால் இப்பகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. சாய்ந்த வாழைகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்பட வில்லை.
இந்நிலையில் மீண்டும் சூறை காற்றினால் வாழைகள் சேதமடைந்துள்ளது. எனவே காற்றினால் நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஐந்தருவியில் நேற்று இரவு அதிகளவில் தண்ணீர் விழுந்ததால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்று காலை ஐந்தருவியில் மிதமாகவும், மெயினருவியில் குறைந்த அளவிலும் தண்ணீர் கொட்டுகிறது. பழைய குற்றால அருவியில் லேசாக தண்ணீர் வருகிறது.
அருவிகளில் தண்ணீர் விழுவதால் குற்றாலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோடை வெப்பத்துக்கு இதமாக அருவியில் குளித்து வருகிறார்கள்.
இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் நேற்று அதிக பட்சமாக செங்கோட்டையில்-41 மில்லி மீட்டரும், சிவகிரியில்-23, குண்டாறு-21, தென்காசி-19.5, அடவி நயினார்-17, கொடுமுடியாறு-15, களக்காடு-12.4, கருப்பாநதி-10, சேரன்மகாதேவி-8.2, நாங்குநேரி -3.3, சேர்வலாறு-1, பாளை-1 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியுள்ளது.
மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 31.37 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர்மட்டம் 9.80 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 46.85 அடியாகவும் உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்